இலங்கை தொடர்பில் அவசர கூட்டம்!

13.06.2021 10:54:09

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர்,

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவது என்பது புதிதல்ல. பல தசாப்த காலமாக தமிழ் மக்களின் மனித உரிமை மற்றும் சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றத்தினை சுதந்திரமாக விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை இலங்கை அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மூலமாக தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.