பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வேலைநிறுத்தப் போராட்டம்!

31.07.2022 10:16:37

பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

ஊதிய உயர்வு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்,

நேற்றும் 24 மணிநேர போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.