
24 மடங்கு சம்பளத்தை உயர்த்திய காந்தாரா நடிகர்!
10.07.2025 00:11:51
2022ல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் காந்தாரா. அந்த படத்தை இயக்கி நடித்து இருந்தவர் ரிஷப் ஷெட்டி. அந்த படத்திற்காக அவர் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார். பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை குவித்த காந்தாரா 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. |
தற்போது காந்தாரா 2 படத்திற்காக ரிஷப் ஷெட்டி தனது சம்பளத்தை 2400% உயர்த்திவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 100 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக தரப்படுகிறதாம். அது மட்டுமின்றி லாபத்திலும் அவருக்கு பங்கு என அக்ரிமென்ட் போடப்பட்டு இருக்கிறதாம். அதில் குறைந்தபட்சம் அவருக்கு 50 கோடி வரை தனியாக கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது. |