கட்டுமான வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி நிவாரண தொகை

06.07.2022 09:29:35

பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/ வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 கோடி. கட்டுமான வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/ வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத்தொகை வழங்கிடும் அடையாளமாக 7 நியமனதாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.