'துணிவு' ரசிகர்கள் கொண்டாட்டம்...!
10.01.2023 21:35:45
அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயா ரிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள புதிய படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார் கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய் துள்ளார். ஜிப்ரான் இசையமைத் திருக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் 'துணிவு' படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.