கென்யாவில் 23 பேர் உயிரிழப்பு
27.06.2024 07:43:04
கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
புதிய வரி விதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய நிதி சட்டமூலத்திற்கு அமைய பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருள்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டமையே கென்ய ஆர்ப்பாட்டத்திற்கான காரணமாகும்.
சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய பதுங்கு குழி வழியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கென்யாவின் நைரோபி நகரில் பல நாள்களாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது