நீதி கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம் - நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் தெரிவிப்பு

18.05.2021 10:40:15

 

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து உரை நிகழ்த்திய முதல்வர், “உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி, அவர்களது இழப்புக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாகும்.

ஆகவே, நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.