இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.

10.07.2026 14:26:30

இன்று கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 மேலும், கரூர் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் தனது பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தில், அண்மையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் விஜய், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைக்கான அரசாணைகளை வழங்குகிறார். மேலும், அந்த குடும்பங்களுக்குத் தேவையான இதர உதவிகள் குறித்தும் அவர் கேட்டறிய உள்ளார்.

 

இந்த நிகழ்ச்சி அரசியல் ரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் பேசும் போது, மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சில கசப்பான உண்மைகளை அவர் வெளிப்படையாகப் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.