பெண்களை சவுக்கால் அடித்த தாலிபான்கள்

10.09.2021 14:15:17

தாலிபான் ஆட்சிக்கு எதிராக பல இடங்களில் பெண்கள் போராடி வருகின்றனர். காபூல் தெருக்களில் போராடியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“அவர்கள் எங்களை சவுக்கால் அடித்தார்கள். எங்களை வீடுகளுக்குச் சென்று விடுமாறும், அரசை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறார்கள். எங்களை எதிலும் சேர்க்காத போது, எந்த வித உரிமையும் அளிக்கப்படாத போது, நாங்கள் ஏன் இந்த அரசனை ஏற்க வேண்டும்" என்று ஒரு பெண் கூறும் வீடியோ பரவி வருகிறது.

டோலா செய்தி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை தாலிபான்கள் கடுமையாக தாக்குவது பதிவாகியுள்ளது.