
பிரான்ஸ்-ஜேர்மனி இடையே பதற்றம்.
ஐரோப்பிய போர் விமான திட்டத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி இடையே பதற்றம் உருவாகியுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் இணைத்து உருவாக்கும் புதிய தலைமுறை போர் விமான திட்டமான FCAS (Future Combat Air System) தற்போது கடும் பதற்றத்தை எதிர்கொள்கிறது. Dassault Aviation நிறுவனத்தின் தலைமை அதிகாரி எரிக் ட்ராப்பியர், "பிரான்ஸ் தனியாகவே புதிய போர் விமானத்தை உருவாக்கும் திறன் கொண்டது" என ஜேர்மனிக்கு சவால் விடுத்துள்ளார். |
இந்த திட்டம் 100 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும். Dassault மற்றும் Airbus நிறுவனங்களுக்கு இடையே இத்திட்டத்தின் கட்டுப்பாடு மற்றும் வேலை பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. Dassault நிறுவனம், திட்டத்தின் முக்கியமான Crewed Fighter பகுதிக்கு தனித்த கட்டுப்பாடு வேண்டுமென வலியுறுத்துகிறது. அதேநேரம், Airbus நிறுவனத்திற்கும் அதன் பொறுப்பில் உள்ள பகுதிகளில் சுதந்திரம் வழங்கப்படும் என Dassault தெரிவித்துள்ளது. பிரான்சின் Dassault நிறுவனம் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்வதை தாமதப்படுத்துவதாக ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. Politico மற்றும் Financial Times ஆகியவை, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் ஸ்வீடனுடன் மாற்று திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர்,இது குறித்து எந்தவொரு அரசாங்க பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என மறுத்துள்ளது. |