
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உடையில் சமந்தா..!
22.01.2022 11:32:37
நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து சமந்தா ரிஷிகேஷில் தன்னுடைய விடுமுறையை கழித்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது தன்னுடைய தோழி ஷில்பா ரெட்டியுடன் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்.
அங்கு சுவிட்சர்லாந்தில் அவர் பனிச்சறுக்கு உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஆகியவற்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.