விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்த செங்கோட்டையன்!

27.11.2025 14:23:12

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். தமிழ்நாட்டில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான செங்கோட்டையனை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

இவர்களின் சந்திப்பின்போது, கட்சியை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து மனம்விட்டு பேசியுள்ளனர்.

செங்கோட்டையன் த.வெ.க கட்சியில் இணைந்துள்ளது அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.