இங்கிலாந்தின் பயணதிற்கு உகந்த பட்டியலில் மால்டா, மடேரா, பலேரிக்ஸ் இணைப்பு

30.06.2021 10:10:28

மால்டா, மடேரா மற்றும் பலேரிக் தீவுகள் ஆகியவை இங்கிலாந்தின் பயணதிற்கு உகந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெர்முடா, கேமன் தீவுகள், அன்டிகுவா, பார்புடா, டொமினிகா, பார்படாஸ் மற்றும் கிரெனடா உள்ளிட்ட நாடுகளுடன் குறித்த நாடுகளும் இணைந்துள்ளன.

இதன் காரணமாக விடுமுறை நாட்களில் குறித்த பகுதிகளிலிருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த நாடுகளில் கொரோனா தொற்று நிலைமைகள் மாறினால், அவை அம்பர் அல்லது சிவப்பு பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேலும் இங்கிலாந்தின் கண்காணிப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.