தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் பரபரப்பு!

10.01.2024 16:06:09

ஈக்வடோரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்குள் நேற்றைய தினம் திடீரெனப் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தில்  நிகழ்ச்சியொன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாமர்த்தியமாகச் செயற்பட்ட பொலிஸார் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 13 பேரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அந்நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதுவரை 7 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஈக்வடோரின் குவாயாகில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த   பிரபல போதை பொருள் கடத்தல் தலைவனான அடோல்போ மசியாஸ் இறந்துவிட்டதாக வெளியான செய்தியினைத் தொடர்ந்தே அந்நாட்டில் இவ்வாறு  கலவரங்கள் வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது