சூர்யா படத்தில் சூரியின் கதாபாத்திரம்

30.08.2021 05:24:27

கடந்த சில வருடங்களாக குறைவான படங்களையே கொடுத்த சூரிக்கு இந்தவருடம் நிச்சயம் ஏறுமுகம் தான். நேற்று சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடிய சூரி, தான் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது, அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தது குறித்தெல்லாம் கூறியுள்ளார்.

அதேபோல பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூரி. இந்தப்படத்தில் கதாநாயகி பிரியா அருள்மோகனுக்கு மாமன் முறையிலான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் சூரி. நேற்று தனது பிறந்தநாளையே இந்தப்படத்தின் படப்பிடிப்பில் தான் கொண்டாடியுள்ளார் சூரி.