வட கொரியாவில் பொதுத்தேர்தல்.
|
வட கொரியாவில் மார்ச் 15ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் செயல்படும் வட கொரியாவில் அரிய நாடு தழுவிய வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது. வடகொரியாவின் அரசு ஊடகமான KCNA வெளியிட்ட செய்தியின் படி, மார்ச் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்திற்கான சுப்ரீம் பீப்பிள்ஸ் அசெம்பிளி(Supreme People’s Assembly) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
|
இந்த தேர்தலானது ஆளும் அதிகார வர்க்கத்தில் அரசு ஆதரவு பெற்ற புதிய முகங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் நிர்வாகத்தை புதுப்பிக்கும் நடைமுறையாக பார்க்கப்படுகிறது. அத்துடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர முன்னுரிமைகளை சர்வதேச சமூகங்களுக்கு சமிக்ஞை செய்யும் நடைமுறையாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல்களை பொறுத்தவரை 100% வாக்குப்பதிவு மற்றும் அரசு ஆதரவு பெற்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு முழுமையாக கிடைத்துள்ளது என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. வட கொரியாவில் Supreme People’s Assembly (SPA) மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக பார்க்கப்படுகிறது என்றாலும், கிம் ஜாங் உன் தலைமையிலான ஆளும் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் முத்திரை வழங்கும் அமைப்பாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |