இறந்துவிடுவீர்கள் மக்களே!' ஜேர்மன் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

22.11.2021 16:14:00

ஜேர்மனியர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் Jens Spahn எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 30,000 பேருக்கு புதிதாக கோவிட-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது - இது கடந்த வார பாதிப்பு எண்ணைக்கையுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகமாகும்.

மேலும், 64 பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்தனர். அதேநேரம், ஜேர்மனியில் கிட்டத்தட்ட அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகிறது. சில பெரிய மருத்துவமனைகளில் கூடுதலாக வரும் நோயாளிகள் வெகுதூரத்தில் இருக்கும் சிறிய கிளினிக்குகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், ஜேர்மனியர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி உட்பட போட்டுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

"அநேகமாக இந்த குளிர்காலத்தின் முடிவில், சில சமயங்களில் இழிந்த முறையில் சொல்வது போல், ஜேர்மனியில் உள்ள அனைவரும் ஒன்று தடுப்பூசி போடுவார்கள், தொற்றிலிருந்து குணமடைவார்கள் அல்லது இறந்துவிடுவார்கள்" என்று ஸ்பான் கூறினார்.

"அதனால்தான் நாங்கள் அவசரமாக தடுப்பூசியை போடும்படி பரிந்துரைக்கிறோம்" என்று அவர் கூறினார்.