ரஷ்­யா­வின் செயல்­க­ளுக்­கான பதி­லடி

27.12.2022 21:04:56

ரஷ்­யா­வின் ஆகா­யப் படைத் தளம் ஒன்­றின்­மீது உக்­ரைன் மேற்­கொண்ட வானூர்­தித் தாக்­கு­தலில் ரஷ்­யா இராணுவ வீரர்கள் மூவர் கொள்ளப்பட்டள்ளனர்.

எங்­கெல்ஸ் ஆகா­யப் படைத் தளத்­திற்கு அருகே குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­போதும் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரி­வித்­துள்ளது.

எங்­கெல்ஸ் ஆகா­யப் படைத் தளம் உக்­ரைன் எல்­லை­யி­லி­ருந்து சுமார் 500 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்­ளது.

ரஷ்­யா­வின் செயல்­க­ளுக்­கான பதி­லடி

 

 

தாக்­கு­த­லுக்கு உக்­ரைன் இராணு­வம் அதி­கா­ர­பூர்­வ­மா­கப் பொறுப்­பேற்­க­வில்லை. எனி­னும், இந்­தத் தாக்­கு­தல் உக்­ரே­னில் ரஷ்­யா­வின் செயல்­க­ளுக்­கான பதி­லடி என்று உக்­ரைன் விமான படைப் பேச்­சாளர் ஒரு­வர் கூறி­னார்.

கிறிஸ்­து­மஸ் திரு­நா­ளான நேற்று முன்­தி­னம் உக்­ரே­னின் பல பகு­தி­களில் ரஷ்­யப் படை­கள் தொடர் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டன.

மேலும், சனிக்­கி­ழ­மை­யன்று குப்­பி­யான்ஸ்-லைமன் பகுதி­யில் சுமார் 60 உக்­ரே­னிய இராணுவ வீரர்­க­ளைத் தனது படை­கள் கொன்­ற­தா­க­வும் ரஷ்­யா­வின் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது.

உக்­ரேன்­மீது தாக்­கு­தல்­கள்

பேச்­சு­வார்த்தை நடத்­தத் தாம் தயார் என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கூறி­யி­ருந்த வேளை­யில் உக்­ரைன்­மீது தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டமை குறித்த தாக்குதலுக்கு பின்னனியாய் அமைந்ததாக உக்­ரைன் விமான படை தெரிவித்துள்ளது.

புட்­டின் அவ்­வாறு கூறி­யது பாசாங்­கு­தான் என்றும், ஐக்­கிய நாட்டு நிறு­வன பாது­காப்பு மன்­றத்­தின் நிரந்­தர உறுப்­பி­னர் தகு­தியை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து பறிக்குமாறு உக்­ரைன் குரல் கொடுக்­கத் திட்­ட­மிட்டுள்­ளதாகவும் உக்­ரைன் வெளி­யு­றவு அமைச்­சர் ட்மிட்ரோ குலோபா தெரி­வித்­துள்ளார்