வெள்ளியன்று அமெரிக்கா புறப்படுகிறது இலங்கை குழு!

16.07.2025 15:04:39

இலங்கை ஏற்றுமதிகள் மீதான வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இலங்கை அரச குழு வெள்ளிக்கிழமை (18) அமெரிக்காவிற்குப் புறப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், இலங்கை ஏற்றுமதிகளில் கூடுதல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான முயற்சியாக, ஒகஸ்ட் 1 ஆம் திகதி காலக்கெடுவிற்கு முன்னதாக மேலும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருப்பதாகக் கூறினார்.