முட்டை விலை 50 ரூபா வரை அதிகரிப்பு!

08.12.2025 14:45:22

சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன. இதனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.