அமெரிக்காவில் ஒரே நாளில் 5.98 லட்சம் பேருக்கு கோவிட்

21.01.2022 04:58:44

இன்றைய காலை நிலவரப்படி, உலகில் 34.27 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 55.92 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர்.

உலகில் 27.62 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் 5.98 லட்சம் பேருக்கும், பிரான்சில் 4.25 லட்சம் பேருக்கும், இத்தாலியில் 1.88 லட்சம் பேருக்கும், பிரிட்டனில் 1.07 லட்சம் பேருக்கும் புதிதாக கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.