
சர்ச்சை, மாநாடு தள்ளிப் போகக் காரணம்?
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் மாநாடு. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் வெளிவருவதால் அதற்கு அதிக தியேட்டர்களை தியேட்டர்காரர்கள் ஒதுக்கியதால், மாநாடு படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்க சிக்கல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதனால்தான் மாநாடு படத்தை தள்ளி வைத்துவிட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல என்கிறது கோலிவுட் வட்டாரம். 2017ம் ஆண்டு வெளிவந்த கொரியன் படமான ஏ டே என்ற படத்தின் கதையைக் காப்பி அடித்துத்தான் மாநாடு படத்தின் கதையை எழுதியிருக்கிறார்களாம்.
மாநாடு டிரைலரையும், ஏ டே டிரைலரையும் பார்த்தால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என ரசிகர்கள் கண்டுபிடித்துவிடலாம்.