போதைப் பொருள் கடத்திய மாடல் அழகிக்கு 20 ஆண்டு சிறை

17.06.2022 07:14:48

ரஷ்யாவில், போதைப்பொருள் கடத்தியதாக, அழகி போட்டியில் பரிசு வென்றவரும், பிரபல மாடலுமான கிறிஸ்டியானா துகினா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

ரஷ்யாவில், 2.5 கிராமுக்கு மேல் போதைப் பொருள் வைத்திருந்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அந்நாட்டில் சிறையில் உள்ள மூவரில் ஒருவர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.இந்நிலையில், அழகி போட்டியில் வென்றவரும், மாடல் அழகியுமான கிறிஸ்டியானா துகினா, 34, அரை கிலோ போதைப் பொருள் வைத்திருந்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர், 2019ல் நடந்த மிஸ் துபாய் அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அழகி போட்டிகளில் அவர் பரிசுகள் வென்றுள்ளார். நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.