சசிகலா, இளவரசி பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு
16.04.2022 15:34:20
சசிகலா, இளவரசி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது. சொகுசு வசதி பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று வழக்கு விசாரணையின்போது சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.