மேலும் சில பொருட்களின் விலைகள் குறைப்பு
12.04.2024 07:00:00
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.
கோதுமை மா ஒரு கிலோ கிராம் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலி ஒரு கிலோகிராம் 125 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது