யாழ் முதல்வரின் கைது ஸ்ரீலங்கா அரசாங்கத்தை மட்டுமல்ல மேலும் பலரையும் திருப்திப்படுத்தியிருக்கும்!

09.04.2021 08:45:45

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.

கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுநர் எடுத்து, நிதானமாக நடந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகப் புத்தகத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

யாழ்.முதல்வரின் கைதை கண்டித்து, ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தனது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த கைது அரசாங்கத்தினரை மட்டுமல்ல, நம்மவர்கள் சிலபலரையும் திருப்தியடைய செய்திருக்கிறது என நான் அறிகிறேன். கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாக கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.