அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை
27.11.2021 09:06:32
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அதி கனமழை பெய்யும்.