தைவான் 13 மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து – 40க்கும் மேற்பட்டோர் பலி

15.10.2021 14:17:36

தைவானில் உள்ள கௌஷியாங் நகரில் இருக்கும் 13 மாடி கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை தீ விபத்து நடந்த இந்த கட்டடம் அடுக்குமாடி குடியிருப்பாகவும் வர்த்தக வளாகமாகவும் இயங்கியது என்று உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 79 பேரில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.