மகனை சந்திக்க சிறைக்கு சென்றார் ஷிராந்தி ராஜபக்ச.

07.09.2026 08:56:14

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச இன்று (07) சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துள்ளார்.

சற்று முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.