இனிமேல் நான் தமிழில் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் தயாராகும் - சிம்பு

23.11.2021 09:04:24

 

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது கலந்து கொண்ட சிம்பு, அதையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மீடியாக்களை சந்தித்தபோது, இந்த படத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே எடுத்தோம். படத்தை சிறப்பாக எடுத்து முடிக்க அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மேலும், நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். இனிமேல் நான் தமிழில் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் தயாராகும் என்று தெரிவித்துள்ள சிம்புவிடத்தில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்க என்று சொல்லி விட்டு நழுவியிருக்கிறார்.

மேலும், மாநாடு படத்தை அடுத்து கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.