மொதராத்திரி இயக்குனரை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்.

13.10.2026 08:27:04

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் மொத ராத்திரி.

திருநெல்வேலி பகுதியில் ஒரு கிராமத்தில் ஒரு இரவில் நடக்கும் கதையாக மொத ராத்திரி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதோடு இந்த படத்திற்கு ராஜா கருப்புசாமி அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. எனவே சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை பற்றி பலரும் பாராட்டினர். எனவே இது வெற்றிப் படமாக மாறியது. மேலும் திரையுலகில் பல இயக்குனர்களும் நடிகர்களும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு பேசினார்கள்..

நடிகர் சிவகார்த்திகேயன் மொதராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமியை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை ராஜா கருப்பசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.