மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

15.12.2021 12:10:23

பொட்டாஷ் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பொட்டாஷ் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் அளிக்க வேண்டும் எனவும் பொட்டாஷ் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.