பாலியல் தொழிலாளர்களை கொல்லத் துடிக்கும் தாலிபான்கள்

05.09.2021 11:33:13

பழமைவாதிகளான தலிபான்கள், ஆப்கனில் உள்ள பாலியல் தொழிலாளர்களை கொலை செய்ய பட்டியல் தயாரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. அதேசமயம் இத்தொழில் செய்வோரை தண்டிக்கும் சட்டம் எதுவும் இல்லை என்பதால், தலைநகர் காபூலில் நுாற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஆப்கனை மீண்டும் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு ஆபாச வலைதளங்களில் இடம்பெற்றுள்ள ஆப்கன் பெண்களின் படங்களைத் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'நிக்கா'மேலும், வலைதளத்தில் காணப்படும் பாலியல் தொழில் செய்யும் ஆப்கன் பெண்களின் பட்டியலை, தலிபான் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. பட்டியலில் உள்ள பெண்களை கைது செய்து கூட்டு பலாத்காரத்திற்குப் பின் பொது இடத்தில் கழுத்தை வெட்டுவது, துாக்கிலிடுவது அல்லது கல்லால் அடித்து கொலை செய்வது தலிபான்களின் வழக்கம். இதனால் காபூலில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

ஏற்கனவே தலிபான், பகுதி வாரியாக உள்ள இமாம்களுக்கு 15 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட விதவைகளின் பட்டியலை தயாரிக்கச் சொல்லி உத்தரவிட்டு உள்ளது. தலிபான் படையினருக்கு 'நிக்கா' எனப்படும் திருமணம் செய்து வைக்க இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போகப் போகத் தெரியும்ஆப்கனில் பெண்கள், ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.