ரசவாதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்.

20.06.2024 08:42:00

மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களில் விருது வென்றது.
 

இந்நிலையில் சாந்தகுமார் அடுத்த படமாக ரசவாதி கடந்த மாதம் வெளியானது. அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  இந்த படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் திரையரங்கில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
 

இதையடுத்து இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாந்தகுமாரின் படங்கள் நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களைக் கவரும். அதுபோல ரசவாதி படமும் ரசிகர்களை ஓடிடியில் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.