ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

28.06.2024 08:32:28

கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதன்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனுவொன்றை அளிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சென்னையில் நேற்றைய தினம் இடம்பெற்ற  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரேமலதா ”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை நிலை தெரிய சி.பி.ஐ. விசாரணை நிச்சயம் தேவை எனவும் அப்போதுதான் தி.மு.க.வினரின் முகத்திரை கிழியும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.