கோட்டாபய பதவி விலகல் இழுபறி நிலையில்!

13.07.2022 09:00:00

ஜனாதிபதி கோட்டபாய தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை தெரிவித்திருந்தது.       

இலங்கை விமானப் படையின் விமானத்தில் நாட்டை விட்டு சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவை  சென்றடைந்த நிலையில்   அங்கிருந்து அவர்  வேறு நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.