நான்காவது தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் !

13.03.2021 08:07:48

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், நான்காவது தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க உற்பத்தியாளரான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு ஒப்புதல் அளித்தது.

ஏப்ரல் மாதத்தில் முதல் விநியோகங்களை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது. ஜேர்மனி 36.7 மில்லியன் டோஸைப் பெற உள்ளது.

இதனிடையே ஜேர்மனியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1 இலட்சம் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அந்த நாட்டு கொரோனா தடுப்புக் குழுவின் தலைவர் லோதர் வீயலர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் மூன்றாவது கொரோனா வைரஸ் தொற்லை எழும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.