ஜனநாயகன் பட ரிலீஸ் எப்போது?

26.03.2025 06:05:00

எச்.வினோத், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு என மிகவும் தரமான படங்கள் கொடுத்து அசத்தியவர். நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நேரத்தில் தனது கதை மூலம் விஜய்யை அசத்தி அவரது 69வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

படத்திற்கான படப்பிடிப்பு சூடு பிடிக்க நடந்து வருகிறது, இப்பட வேலைகளை வேகமாக முடித்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய்.

இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி குறித்து போஸ்டருடன் அறிவிப்பு வந்துள்ளது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாம்.