நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!
05.01.2024 16:41:49
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைக்காலப் போக்குகள் மற்றும் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக அவர்கள்கள் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இன்னிலையில் 2024 முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் இரண்டாவது மதிப்பாய்விற்கு முன்னதாக ஐ.எம்.எப். குழுவின் வருகை இடம்பெறுகின்றது.
மேலும் பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும் சீனாவின் எக்சிம் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மட்டுமே இலங்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.