எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர்

27.04.2022 04:40:44

டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முன் வந்தார்.

இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்கின் அழைப்பை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.