திணறும் ஜேர்மன் மருத்துவமனைகள்! விமானப்படையை களமிறக்கும் அரசு

26.11.2021 16:57:05

நாட்டில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்க ஜேர்மன் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் தீவிர சிகிச்சை நோயாளிகளை விமானம் மூலம் இடம் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளளது.

ஜேர்மன் விமானப்படை தீவிர சிகிச்சை நோயாளிகளை இடம் மாற்றுவதற்கு உதவும் என அரசு அறிவித்துள்ளது.

முன் எப்போதும் இல்லாததை விட நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அரசாங்கம் எச்சரித்ததை தொடர்ந்து ஜேர்மன் சுகாதார அமைச்சகம் இந்நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களிடையேயான தொடர்பைக் கடுமையாகக் குறைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

முன் எப்போதும் இல்லாததை விட நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் மோமாக இருப்பதாக அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொடங்கியதிலிருந்து முதல் முறையாக நாட்டிற்குள் பெரிய அளவிலான நோயாளிகளை இடமாற்றம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்வதாக ஸ்பான் கூறினார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் தெற்கு நகரமான Memmingen-ல் இருந்து வடக்கு Rhine-Westphalia மாநிலத்திற்கு தீவிர சிகிச்சை நோயாளிகள் Luftwaffe A310 medevac விமானம் மூலம் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று ஜெர்மன் செய்தி நிறுவனமான டிபிஏ தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் எச்சரித்துள்ளது.