பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்
06.06.2024 07:55:52
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சாரச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (06) நடைபெறவுள்ளது.
இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு அதன் பின்னர் அது நிறைவேற்றப்படவுள்ளது.
உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
இதன்படி, இந்தச் சட்டம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.