அடுத்த கட்டத்தை எட்டிய சிவகார்த்திகேயனின் பராசக்தி!

22.11.2025 13:23:42

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் 25வது படமான பராசக்தி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அதாவது, ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அதர்வா துவங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.