இளவரசர் ஹரி கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

13.04.2021 11:18:49

 

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும். இளவரசர் ஹரியின் மனைவியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் தனது கணவருடன் லண்டன் செல்லவில்லை.

இதேவேளை தனது தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்துள்ள இளவரசர், இன்னமும் எத்தனை நாட்களுக்கு பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என்பது குறித்து முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.