ஸ்பெயின் வெள்ளப்பெருக்கு
ஸ்பெயினின் – வெலன்சியா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205ஐ கடந்துள்ளது.
தற்போது ஸ்பெயினின் பல பகுதிகளில் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீட்பு பணிகளில் இதுவரை சுமார் 500 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்த அளவுக்கு அதிகமான கனமழையினால், ஸ்பெயின் நாட்டின் Paiporta மற்றும் Valencia ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் ஸ்பெயின் கண்டிராத மிகப் பெரிய இயற்கைப் பேரிடர் இது என்று அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.