
உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!
உலகளாவிய பயண தளமான ‘Big 7 Travel’ தொகுத்த உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, இலங்கை உலகின் மிக அழகான தீவாக முடிசூட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா, ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை முந்தி முதலிடத்துக்கு வந்துள்ளது.
Big 7 Travel தகவலின்படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுறுசுறுப்பான உள்ளூர் சுற்றுலா பகுதிகளுக்காக இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத் துறை அதன் நிலையான மீட்சி மற்றும் மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகளாவிய அங்கீகாரம் மேலும் அதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.