அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும்

26.05.2022 08:59:07

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது என இலங்கை வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவர் டானியா அபயசுந்தர  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இதுவரை காலமும் தங்களுடைய சேமிப்பில் தொழில்களை நடத்தி வந்ததாகவும், எனினும், தற்போது அதனை தொடர்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதாகவும், இதேவேளை  தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.