10 ஆண்டுகளாக ஊழலை ஒழிக்க போராடுகிறேன்

02.04.2024 07:41:45

ஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

உத்தரப்பிரதேசத்தில் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான இராமாயண நடிகர் அருண் கோயிலை ஆதரித்து பிரச்சாரம் செய்த போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, எதிர்க்கட்சிகளை விமர்சித்த மோடி, தாம் ஊழலுக்கு எதிராகப் போராடி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களிடமே கொண்டுச் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மூன்றாவது முறை ஆட்சியமைப்பதற்கான திட்டங்களை தயாரித்து வைத்திருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர், முதல் 100 நாட்களில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.