அமெரிக்காவில் சூறாவளி
06.03.2022 09:45:19
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மேடிசன் கவுண்டியை பயங்கர சூறாவளி தாக்கியது. சூறாவளியின் தாக்கத்தால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சூறாவளியால் அங்கு 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூறாவளி நான் பார்த்ததில் மிகப்பெரிய ஒன்றாகும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். சூறாவளி கடந்துசென்ற நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதத்தில் பல சூறாவளிகள் உருவெடுத்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.