பிரேசிலில் நிலச்சரிவு 31 பேர் பலி

30.05.2022 08:02:56

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்கில் அமைந்துள்ள பெர்னாம்போ மாகாணத்தில் கன மழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கி இதுவரை, 31 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.